+

மாயமான பிணங்களின் கண்கள்.. ம.பி அரசு மருத்துவமனையில் தொடரும் மர்மம்.. - பீதியில் பொதுமக்கள் !

featuredImage

மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஜனவரி 4-ம் தேதி அமென்ட் என்ற கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய மோதிலால் கவுண்ட் என்பவர் தான் வேலைபார்த்து வந்த இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள் அவரை சாகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக Freezer என்று சொல்லக்கூடிய குளிர்ந்த பெட்டியில் வைக்கப்பட இருந்தது. ஆனால் அப்போது அது வேலை செய்யாததால், அவரது உடல் பிணவறையில் திறந்த வெளியில் இருந்துள்ளார். தொடர்ந்து மறுநாள் காலை அவரது உடலை உடற்கூறாய்வு செய்யவந்த மருத்துவர், அவரை பார்த்தபோது, அவரது ஒரு கண் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இது பெரிய சர்ச்சையான நிலையில், திறந்த வெளியில் கிடந்ததால் எலி தின்றிருக்கும் என்று மருத்துவர் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களே இருக்கும் நிலையில், அதே ஜனவரி மாதத்தில் மற்றொரு சம்பவமும் இதே போல் அரங்கேறியது.

அதாவது 25 வயதுடைய ரமேஷ் அகிவார் என்ற இளைஞர் விபத்தில் சிக்கி இந்த மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருக்கு இங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாளே இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக Freezer என்று சொல்லக்கூடிய குளிர்ந்த பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தது.

மறுநாள் வழக்கபோல் மருத்துவர் அவரது உடலை உடற்கூறாய்வுக்கு எடுத்தனர். அப்போது அவரது ஒற்றை கண்ணும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் இந்த அதிர்ச்சி நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த தகவலை அடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் நடந்த சம்பவத்திற்கே இன்னும் சரியான விடை தெரியாத நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனையின் குடியுரிமை மருத்துவ அதிகாரி டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறுகையில், "பிணவறையில் ஃப்ரீசரில்தான் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டது. இருப்பினும் கண்கள் எவ்வாறு காணாமல் போனது என்று தெரியவில்லை. காவல்துறை முதற்கட்ட விசாரணையில் எலிகள் கடித்திருக்கலாம் என என கூறப்படுகிறது.

கடந்த 1 வாரத்திற்கு முன்பு அரங்கேறிய இந்த சம்பவத்திற்கு இன்னும் முழுமையான விடை தெரியவில்லை. இந்த நிகழ்வால் அந்த பகுதி மக்கள் பெரும் பதற்றத்திலும் பீதியிலும் உள்ளனர். இது ஏதாவது சைக்கோ வேலையாக இருக்குமோ என்றும் அஞ்சுகின்றனர்.

பாகிஸ்தான் நிகழ்வு

முன்னதாக பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் பக்தி, மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

“இங்கே உட்கார உங்களுக்கு அனுமதி இல்லை..” -ஜோடியிடம் GPAY மூலம் 1000 அபராதம் விதித்த அதிகாரி அதிரடி கைது!
அரசியல் :
×
facebook twitter