+

"அந்த சம்பவத்துக்கு பின்னர் எனது Insta பக்கம் சுத்தமாக முடங்கியது" -மகிழ்ச்சி பொங்க கூறிய மெஸ்ஸி !

featuredImage

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

அர்ஜென்டினாவிலும் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது. கோப்பையை வென்றபின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்கள் தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு பல லட்சம் வீரர்கள் சாலையில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தை மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் அது உலகத்திலேயே அதிக லைக்குகள் பெற்ற புகைப்படமாக மாறியது.

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு மெஸ்ஸி பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், "உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் அப்படியே சில நாட்களுக்கு முடங்கியது. மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் எனக்கு மெசேஜ் வந்திருந்ததுதான் அதற்கு காரணம்.அதே போல எனது இன்ஸ்டா கணக்கை நான்தான் நிர்வகித்து வருகிறேன். அதை நிர்வகிக்க தனியாக யாரையும் நான் பணி அமர்த்தவில்லை. எந்தவொரு நிறுவனமும் எனது கணக்கை நிர்வகிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Test Championship முக்கியம்.. IPL அணிகளுக்கு கட்டுப்பாடு.. வீரர்கள் காயத்தை தவிர்க்க BCCI அதிரடி முடிவு!
அரசியல் :
×
facebook twitter