
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்தவர் பத்ரிசியா போஃல்டஸ் . 64 வயது மூதாட்டியான இவர் கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளார். அப்போது லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது கடையில் சில பொருட்களை வாங்கி உள்ளார். இந்த கடையை காஷ்மீரை சேர்ந்த மேஹ்ராஜ் பாத் என்பவர் நடத்தி வருகிறார். பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றுவந்த பத்ரிசியா நேற்றைய முன்தினம் மீண்டும் புதுச்சேரி வந்துள்ளார். இதனிடையே மேஹ்ராஜிடம் தனக்கு சில உதவிகள் செய்து தருமாறு மூதாட்டி கேட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பத்ரிசியா தங்கியிருந்த அறைக்கு மேஹ்ராஜ் வந்துள்ளார். அப்போது அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பிறகு அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அப்போது அவர் வன்கொடுமை செய்யப்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் மருத்துவமனைக்கு வந்த போலிஸாரிடம் நடத்தவற்றைக் கூறி மூதாட்டி பத்ரிசியாவிடம் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் மேஹ்ராஜ் பாதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
அமெரிக்கா நாட்டை சேர்ந்த மூதாட்டியைக் காஷ்மீரை சேர்ந்த வாலிபர் கற்பழித்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் வகுப்பின்போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட உ.பி ஆசிரியர்.. பயங்கர சம்பவத்தின் பின்னணி என்ன ?